TNPSC Thervupettagam

வீட்டுப் பதிவுகள் தரவரிசை - RERA

December 5 , 2018 2183 days 722 0
  • சொத்துகள் குறித்து ஆலோசனை வழங்கும் நிறுவனமான Anarock என்ற நிறுவனமானது நவம்பர் மாதம் வரை நாட்டில் உள்ள நிலைமதிப்பு ஒழுங்குமுறை ஆணையங்களின் (RERA - Real Estate Regulatory Authority) செயல்திறன் குறித்து ஆய்வு செய்தது. மேலும் அந்நிறுவனம் இந்த ஆய்வு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • வீட்டுத் திட்டப் பதிவுகளில் இந்தியாவில் உள்ள நிலமதிப்பு ஒழுங்குமுறை ஆணையங்களில் தமிழ்நாடு நிலமதிப்பு ஒழுங்குமுறை ஆணையமானது தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, பதிவுகள் குறித்த தரவரிசையில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து குஜராத், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த தரவரிசையில் இடம் பிடித்துள்ளன.
  • தமிழ்நாடு நில மதிப்பு (ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி) விதிகள், 2018-ன் படி குறைந்த பட்சம் 8 அலகுகளுடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து வீட்டுவசதித் திட்டங்களும் TNRERA-ல் (Tamil Nadu Real Estate Regulatory Authority - TNRERA) கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்