பெங்களூருவின் JNCASR (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research) என்ற ஒரு நிறுவனமானது, தேவையற்ற வெப்பத்தினை ஆற்றலாக மாற்றும் திறன் கொண்ட ஓர் அதிநவீனப் பொருளை உருவாக்கியுள்ளது.
வெவ்வேறு அடுக்கு சேர்மங்களின் தனித்துவமான வகுப்பான ஃபெரே கிரிஸ்டல்களில் முறுக்கி அமைக்கப்பட்ட அடுக்குகளை உட்செலுத்துவதன் மூலம் இக்குழு ஒரு புதிய வெப்ப மின் பொருளை உருவாக்கியுள்ளது.
டின் செலினைடு (SnSe) அடிப்படையிலான பொருள் ஆனது, n-வகை பொருட்களைக் கொண்டதாக கூறப்படும் 2.3 என்ற அதிகபட்ச வெப்ப மின் மதிப்பினைக் கொண்டு உள்ளது.
பயன்படுத்தப்படும் அனைத்து ஆற்றலிலும் சுமார் 65 சதவீதம் ஆனது இயற்கையில் வெப்பமாக இழக்கப்படுவதால், வெப்ப மின் பொருட்கள் CO2 போன்ற மிகவும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடாமல் தேவையற்ற வெப்பத்தினை மின்சாரமாக மாற்றுவதன் மூலம் ஒரு நிலையான தீர்வை வழங்குகின்றன.
ஃபெரே கிரிஸ்டல்கள் வெவ்வேறு அடுக்குச் சேர்மங்களின் (MLCs) துணைப் பிரிவாகும், என்பதோடு அவை வெவ்வேறுக் கட்டமைப்புகளின் மாற்று அடுக்குகளால் ஆன இரு பரிமாண மீப்படிக அணியாகும்.