TNPSC Thervupettagam

வீபாக்ஸ் இந்தியா திறன் அறிக்கை 2023

December 31 , 2022 565 days 331 0
  • வீபாக்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான திறன் அறிக்கையானது, வர்த்தக அமைப்புகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மேலும் பிறவற்றால் தொகுக்கப் பட்டதாகும்.
  • இந்த அறிக்கையின்படி கடந்த ஓராண்டில் இந்தியர்களின் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
  • 50.3 சதவீத விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு பெறத் தகுதியுடையவர்கள் என்று மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இது கடந்த ஆண்டில் பதிவாகிய 46.2 சதவீதத்தினை விட குறிப்பிடத்தக்க அளவிலான அதிகரிப்பு ஆகும்.
  • வேலைத்திறன் உள்ள நபர்கள் எண்ணிக்கையில் உள்ள 52.8 சதவீத பெண்கள் வேலை வாய்ப்புப் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
  • இது வேலைவாய்ப்புப் பெற தகுதியுடைய ஆண்களை விட 47.2 சதவீதம் அதிகமாகும்.
  • இந்தியாவின் வேலைத்திறன் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையில் பெண்களின் தற்போதையப் பங்கு 33 சதவீதமாகும்.
  • இது ஆண் பணியாளர்களின் பங்கினை விட 67 சதவீதம் குறைவாகும்.
  • தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளில் உள்ள மொத்தப் பணியாளர்களில் 36 சதவீதம் பெண்கள் ஆவர்.
  • ராஜஸ்தானில் வேலை வாய்ப்பு பெற தகுதியுடைய மற்றும் பணி புரியத் தயாராக உள்ள பெண்களின் எண்ணிக்கையானது அதிக சதவீதம் (53.5 சதவீதம்) ஆக உள்ளது.
  • அதனைத் தொடர்ந்து 46.5 சதவீதத்துடன் உத்தரப் பிரதேச மாநிலம் இடம் பெற்று உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்