TNPSC Thervupettagam

வீரதீர விருது வென்றவர்கள் 2024

January 28 , 2024 306 days 1160 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், இந்தியாவின் ஆயுதப் படை வீரர்களுக்கு ஆறு கீர்த்தி சக்ரா மற்றும் 16 சௌரிய சக்ரா உட்பட 80 வீரதீர விருதுகளை அறிவித்துள்ளார்.
  • அசோக் சக்ராவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய அமைதி கால வீரதீர விருது கீர்த்தி சக்ரா ஆகும்.
  • சௌர்ய சக்ரா அமைதிக்கான மூன்றாவது மிக உயரிய விருது ஆகும்.
  • அறிவிக்கப்பட்ட ஆறு கீர்த்தி சக்ரா விருதுகளில், மூன்று விருதுகள் மறைவிற்குப் பிந்தைய விருதுகள் பிரிவில் வழங்கப்பட்டன.
  • வழங்கப்பட்ட மொத்த 16 சௌர்ய சக்ரா விருதுகளில் இரண்டு மறைவிற்குப் பிந்தைய விருதுகள் பிரிவில் வழங்கப்பட்டன.
  • இந்த விருதுகளில் 53 சேனா பதக்கம் (மறைவிற்குப் பிந்தைய விருதுகள் பிரிவில் ஏழு), ஒரு நாவோ சேனா பதக்கம் (வீரதீர செயல்) மற்றும் நான்கு வாயு சேனா பதக்கங்கள் (வீரதீர செயல்) ஆகியவை அடங்கும்.
  • இது தவிர, குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள் ஆயுதப்படைகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு 311 பாதுகாப்பு துறை சார் விருதுகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்