TNPSC Thervupettagam

வீரதீர விருதுகள் - குடியரசு தினம்

January 28 , 2022 908 days 479 0
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு 384 வீரதீர விருதுகள் மற்றும் இதர ராணுவ விருதுகளை வழங்கினார்.
  • இராணுவ நடவடிக்கைகளின் போது தனித்துவம் மிக்கப் பங்களிப்பினை வெளிப் படுத்திய வீரர்களுக்கு 12 சௌர்ய சக்கர விருதுகளையும் அவர் வழங்கினார்.
  • ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் உதவித் துணை ஆய்வாளர் பாபு ராம் என்பவருக்கு (மரணத்திற்குப் பின்) குடியரசுத் தலைவர் அவர்கள் அசோக் சக்ரா விருதை வழங்கச் செய்தார்.
  • 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29  அன்று நடைபெற்ற ஒரு நடவடிக்கையின் போது பாபு ராம் ஸ்ரீநகரில் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றார்.
  • அசோக் சக்ரா என்பது இந்தியாவின் மிக உயரிய அமைதிக் கால வீரதீர விருதாகும்.
  • கீர்த்தி சக்ரா என்பது இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய அமைதிக் கால வீரதீர விருதாகும்
  • சௌர்ய சக்ரா என்பது இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய அமைதி கால வீரதீர விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்