பிசிசிஐ ஆனது விளையாட்டு வீரர்களைக் கண்காணிப்பதற்காக தடகள மேலாண்மை அமைப்பு (AMS - Athlete Management System) என்ற ஒரு மென்பொருளையும் புவியிடங்காட்டி பொருத்தப்பட்ட அணியத் தகுந்த சாதனங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
AMS ஆனது விளையாட்டு வீரர்களின் சோர்வு மற்றும் காயங்கள் குறித்து கண்காணிப்பதற்காக 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோப்பைத் தொடரிலிருந்துப் பயன்படுத்தப்படுகின்றது.
நீண்ட நாட்கள் நடைபெறும் ஐபிஎல் தொடரின் போது வீரர்களின் மேலாண்மை மிக முக்கியமான ஒன்றாக மாறியது.
AMS ஆனது செயற்கை நுண்ணறிவைச் சார்ந்துள்ளது. இது வீரர்களுக்குத் தேவைப்படும் உறக்கம் குறித்தும் கண்காணிக்கும்.
பிசிசிஐ ஆனது 2019 ஆம் ஆண்டின் உலகக் கோப்பைக்கான தயார் நிலை மற்றும் ஒவ்வொரு வீரரின் தற்போதைய தகுதிநிலைத் தகவல்களைப் பராமரிக்கின்றது.