TNPSC Thervupettagam
April 21 , 2019 2047 days 887 0
  • மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரானது வீராணம் ஏரியை வந்தடைந்துள்ளது. அந்த ஏரி நீரால் மூழ்கியுள்ளது.
  • சென்னை நகரத்தின் நீர்த் தேவையில் 35 சதவிகிதத்தை வீராணம் ஏரி பூர்த்தி செய்கிறது.
  • இந்த ஏரியின் மொத்தக் கொள்ளளவானது 1,465 மில்லியன் கன சதுர அடியாகும் (mcft - million cubic feet).
  • ஒவ்வொரு நாளும் இந்த ஏரியிலிருந்து 6 mcft (180 மில்லியன் லிட்டர்கள்) நீரானது எடுக்கப்படுகின்றது.
  • ஒரு நாளைக்கு சென்னை நகரத்தின் நீர்த் தேவையானது 0.5 mcft ஆகும்.
  • இந்த நீரானது குழாய்கள் மூலம் விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக நகரத்தை அடைகின்றது.
ஏரி - வரலாறு
  • வீராணம் ஏரியானது பேரரசுச் சோழர்களின் ஆட்சியின் போது பத்தாவது நூற்றாண்டில் (கி.பி. 907 – 955) கட்டப்பட்டது.
  • இது இராஜ ஆதித்ய சோழனால் உருவாக்கப்பட்டது.
  • இவர் தனது தந்தையான வீரநாராயணன் என்ற பட்டத்தைக் கொண்ட முதலாம் பராந்தகச் சோழன் என்பவரின் நினைவாக இந்த ஏரிக்கு வீர நாராயணன் என்று பெயரிட்டார்.
  • வீர நாராயணன் ஏரியானது பின்னாளில் வீராணம் ஏரி என்று அழைக்கப்பட்டது.
  • வீராணம் ஏரியானது கீழ் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் மற்றும் வடவாறு நதி வழியாக செல்லும் கொள்ளிடம் ஆகியவற்றிலிருந்து நீரைப் பெறுகின்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்