TNPSC Thervupettagam

வீலர் தீவுக்கு கலாம் பெயர்: ஒடிஸா அரசு அதிகாரப்பூர்வமாகச் சூட்டியது

July 28 , 2017 2547 days 925 0
  • முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்த தினம் : ஜூலை 27
  • ஒடிஸா மாநிலம் பத்ராக் மாவட்டத்திலுள்ள வீலர் தீவுக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரை ஒடிஸா அரசு அதிகாரப்பூர்வமாகச் சூட்டியுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆட்சேபனை இல்லா சான்று பெற்றதற்குப் பிறகு, பெயர் மாற்றம் தொடர்பான அரசிதழ் அறிவிக்கையை மாநில வருவாய்த் துறை வெளியிட்டது .
  • இதையடுத்து வீலர் தீவுக்கு கலாம் பெயரை முறைப்படி ஒடிஸா அரசு சூட்டியுள்ளது. கலாமின் 2-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு வீலர் தீவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • வீலர் தீவுடனும் பாலசோர் மாவட்டம் சந்திப்பூரில் அமைந்திருக்கும் ராக்கெட் ஏவுதளத்துடனும் கலாம் உணர்வுப்பூர்வமாக தொடர்புகொண்டிருந்தார்.
  • நாட்டின் பாதுகாப்புக்காக ஏவுகணை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மேற்கண்ட இரு இடங்களிலும் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை கலாம் செலவிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்