TNPSC Thervupettagam

வெங்காயம், பூண்டு, முட்டை ஆகியவை இல்லாத உணவு

May 17 , 2019 1893 days 670 0
  • கர்நாடக அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க மதிய உணவினை அளிப்பதற்காக அட்சய பாத்திரம் என்ற அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இந்த அறக்கட்டளையானது இந்து மதத்தின் அடிப்படையில் உணவில் முட்டை, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றைத் தவிர்த்துள்ளது.
  • தேசிய ஊட்டச்சத்து நிறுவனமானது (NIN - National Institute of Nutrition) இந்த அறக்கட்டளைக்கு ஆதரவாக அரசாங்கத்திடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
  • இந்த அறிக்கையை எதிர்த்தும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவின் குறைவான தரம் குறித்தும் ஆர்வலர்கள் குரலெழுப்புகின்றனர்.
NIN
  • NIN ஆனது சர் ராபர்ட் மெக்கரிசன் என்பவரால் 1918 ஆம் ஆண்டு குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனத்தில் தொடங்கப்பட்டது.
  • NIN ஆனது ஊட்டச்சத்து ஆராய்ச்சியின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக அங்கீகரிக்கப் படுகின்றது. இது குறிப்பாக புரத சக்தி ஊட்டச்சத்து குறைபாட்டின் மீது தனிக் கவனத்தைச் செலுத்துகின்றது.
  • இது 1958 ஆம் ஆண்டில் ஹைதராபாத்திற்கு இடம் மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்