வெண்ணிறக் குறியீடு கொண்ட தானியங்குப் பண வழங்கீட்டு இயந்திரங்கள்
July 30 , 2023 483 days 297 0
இந்திய ரிசர்வ் வங்கியானது, வங்கி அல்லாத நிறுவனங்களுக்கு நாடு முழுவதும் வெண்ணிறக் குறியீடு கொண்ட தானியங்குப் பண வழங்கிட்டு இயந்திரங்களை (WLAs) நிறுவவும், சொந்தமாக்கவும் மற்றும் இயக்கவும் அனுமதி அளித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது, குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வங்கிச் சேவைகளின் பரவலை விரிவுபடுத்துவதையும், நிதி உள்ளடக்கத்தை நன்கு மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெண்ணிறக் குறியீடு கொண்ட தானியங்குப் பண வழங்கிட்டு இயந்திரங்கள் ஆனது, வங்கிகள் சாராத நிறுவனங்களால் அமைக்கப்பட்டு, சொந்தமாக மற்றும் இயக்கப் படும் ஏடிஎம்கள் ஆகும்.
வங்கி சாராத ATM இயக்க நிறுவனங்கள் 2007 ஆம் ஆண்டு பண வழங்கீட்டு மற்றும் தீர்வு முறைகள் சட்டத்தின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியினால் அங்கீகரிக்கப் பட்டவை ஆகும்.
வங்கிகள் வழங்கும் பற்று /கடன் / முன்னதாக பணம் செலுத்தப்பட்ட அட்டைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்குகின்றன.
கணக்கு குறித்தத் தகவல், பண வைப்பு, கட்டணம் செலுத்துதல், சிறு கணக்கு அறிக்கைகள், PIN மாற்றம் மற்றும் காசோலைப் புத்தக கோரிக்கைகள் போன்ற சேவைகளையும் இவை வழங்குகின்றன.