இந்தியாவில் உள்ள வெண்மார்பு கடற்கழுகுகள் ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்தில் உள்ள தங்கள் சக இனங்களைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
அவை தற்போது உயர் அழுத்தக் கம்பிகளைக் கொண்ட மின் கோபுரங்களில் தங்கள் கூடுகளைக் கட்டத் தொடங்கியுள்ளன.
இது இந்தியாவின் மும்பைப் பகுதி கடற்கரையிலிருந்து வங்காளதேசத்தின் கிழக்குக் கடற்கரை வரையிலும், தெற்காசியாவில் இலங்கை நாட்டுக் கடற்கரை வரையிலும், தென்கிழக்கு ஆசியாவின் அனைத்துக் கடலோரப் பகுதிகளிலும், தெற்கு சீனா முதல் ஆஸ்திரேலியா நாட்டின் கடற்கரை வரையிலும் காணப்படுகின்றன.
இது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் செந்நிறப் பட்டியலில் குறைந்த அளவு கவனம் தேவைப்படும் இனமாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.
இது பல வருடங்களாக ஒரே பகுதிகளில் வாழ்ந்து, கடலோரம், கடறகழிகள் மற்றும் கடற்கரையின் முகத்துவாரங்களுக்கு அருகிலுள்ள உயரமான மரங்களில் கூடுகளை கட்டுகின்றன.