TNPSC Thervupettagam

வெண்மை புரட்சி 2.0

September 26 , 2024 17 hrs 0 min 53 0
  • 1970 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆபரேஷன் ஃப்ளட் என்ற ஒரு நடவடிக்கையானது, வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தி, இந்தியாவில் பால் பொருள் உற்பத்தித் துறையை மாற்றியமைத்தது.
  • பால் பொருள் உற்பத்திக் கூட்டுறவு சங்கங்கள் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 660 லட்சம் கிலோ பால் கொள்முதல் செய்துள்ளன.
  • 2028-29 ஆம் ஆண்டிற்குள் இதை ஒரு நாளைக்கு 1,007 லட்சம் கிலோவாக அதிகரிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • சுமார் 1.7 லட்சம் பால் கூட்டுறவுச் சங்கங்கள் (DCS) உள்ளன என்ற நிலையில் அவை சுமார் 2 லட்சம் கிராமங்களை (நாட்டின் மொத்தக் கிராமங்களின் எண்ணிக்கையில் 30%) மற்றும் 22% உற்பத்தியாளர் குடும்பங்களை உள்ளடக்கியது.
  • இந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆனது நாட்டின் பால் உற்பத்தியில் 10% மற்றும் சந்தைப் படுத்தக் கூடிய உபரியில் 16% ஆகியவற்றைக் கொள்முதல் செய்கின்றன.
  • தற்போது குஜராத், கேரளா, சிக்கிம் ஆகிய சில மாநிலங்களிலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும், 70%க்கும் அதிகமான கிராமங்கள் பால் கூட்டுறவு நிறுவனங்களைக் கொண்டுள்ளன.
  • இது உத்தரப் பிரதேசம், உத்தரக்காண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய சில மாநிலங்களிலும், ஜம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்திலும் 10-20% மட்டுமே உள்ளது.
  • மேற்கு வங்காளம், அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சிறிய மாநிலங்களில் சுமார் 10%க்கும் குறைவான அளவிலே இத்தகைய கிராமங்கள் உள்ளன.
  • தேசிய அளவிலான தனிநபர் பால் பொருள் கிடைக்கும் தன்மையானது ஒரு நாளுக்கு 459 கிராம் ஆகும் என்ற நிலையில் இது உலகளாவியச் சராசரியான ஒரு நாளுக்கு 323 கிராமை விட அதிகமாகும்.
  • இந்த அளவானது மகாராஷ்டிராவில் 329 கிராம் முதல் பஞ்சாபில் 1,283 கிராம் வரை என மாறுபடுகிறது.
  • 2022-23 ஆம் ஆண்டில் பால் உற்பத்தி ஆனது 230.58 மில்லியன் டன்களை எட்டியதன் மூலம், உலகின் முன்னணிப் பால் உற்பத்தியாளராக இந்தியா இருந்தது.
  • 1951-52 ஆம் ஆண்டில், இந்தியாவில் வெறும் 17 மில்லியன் டன் மட்டுமே பால் உற்பத்தி செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்