வெனிசுலா அதிபர் மடூரோவுக்கு எதிராகத் தடைகள்: அமெரிக்கா அறிவிப்பு
August 2 , 2017 2717 days 997 0
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவை சர்வாதிகாரி என்று குறிப்பிட்டு அவருக்கு எதிராகப் பல தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
வெனிசுலாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் செயல்பாட்டில் இருக்கும்போது, அதற்கும் மேலாக அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்தியது சட்ட விரோதமானது என்றும், அந்த நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடந்து கொள்ளும் அதிபர் என்றும் அமெரிக்கா குற்றம் சாற்றியுள்ளது.