TNPSC Thervupettagam

வெனிசுலா மற்றும் கயானா இடையேயான எல்லை தகராறு

January 1 , 2024 329 days 345 0
  • வெனிசுலா மற்றும் கயானா ஆகிய நாடுகள் எல்லைப் பிராந்தியம் தொடர்பான தங்களது நீண்ட கால தகராறில் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ அல்லது படைகளைப் பயன்படுத்தவோ கூடாது என ஒப்புக் கொண்டு உள்ளன.
  • நிலுவையில் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் இரு நாடுகளும் பிரேசிலில் சந்தித்து அவற்றைத் தீர்க்க திட்டமிட்டுள்ளன.
  • வெனிசுலா நாடானது, ஸ்பெயினின் காலனித்துவ காலத்தில் எஸ்கியோபோ என்ற பகுதி அதன் எல்லைக்குள் இருந்ததால் அந்தப் பகுதியானது அதன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
  • ஆனால் கயானா நாடானது, 1899 ஆம் ஆண்டில் சர்வதேச நடுவர்களால் நிர்ணயிக்கப் பட்ட எல்லையானது அது கயானாவின் ஒரு பகுதி என்று கூறுகிறது.
  • கயானா நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் மூலம் இந்த சர்ச்சையைத் தீர்க்க வேண்டும் என்று வாதிடுகிறது.
  • ஆனால் வெனிசுலா நாடானது இந்த விவகாரத்தில் அந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்