TNPSC Thervupettagam

வெனிசுலாவின் நாணயத்திலிருந்து 5 பூஜ்ஜியங்கள் நீக்கம்

August 8 , 2018 2301 days 671 0
  • வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ நாட்டின் பணவீக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நாணயமான பொலீவரிலிருந்து மூன்று பூஜ்ஜியங்களை அகற்றுவதற்கு ஏற்கனவே முடிவெடுத்து இருந்தார். இதனுடன் தற்பொழுது இரண்டு பூஜ்ஜியங்களுடன் சேர்த்து 5 பூஜ்ஜியங்களை நீக்க தற்பொழுது முடிவெடுத்துள்ளார்.
  • இந்நடவடிக்கை, 2018-ன் இறுதியில் நாட்டின் பணவீக்கம் 1 மில்லியன் சதவீதம் என்ற அளவு இருக்கும் என்ற சர்வதேச செலாவணி நிதியத்தின் (International Monetary Fund - IMF) மதிப்பீட்டிற்கு பிறகு எடுக்கப்பட்டது.
  • வெனிசுலாவின் இந்த பொருளாதார வீழ்ச்சி கடந்த 60 வருடங்களில் உலகின் ஆழமான ஒன்றாகும்.
  • 2014-ன் எண்ணெய் விலை வீழ்ச்சியிலிருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC - The Organization of the Petroleum Exporting Countries) நாடுகளின் பொருளாதாரம் படிப்படியாக சரிந்து வருகிறது. இவ்வீழ்ச்சி, கடுமையான விலை கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு அதன் மூலம் பல வருடங்களாக ஏராளமான சலுகைகளை வழங்கிய சமத்துவ பொருளாதார முறையினை கடைபிடிக்க முடியாமல் செய்துவிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்