நவீன காலத்தில் தனது பனிப்பாறைகள் அனைத்தையும் முற்றிலுமாக இழந்த முதல் நாடாக வெனிசுலா கருதப் படுகிறது.
தென் அமெரிக்க நாட்டில் எஞ்சியிருக்கும் பனிப்பாறையானது ஆண்டிஸ் மலைத் தொடரில் உள்ள ஹம்போல்ட் அல்லது லா கொரோனா ஆகும்.
இது தற்போது "பனிப்பாறை என வகைப்படுத்த முடியாத அளவுக்கு சிறியதாக" மாறி விட்டது.
எனவே, இந்தப் பனிப்பாறையானது ஒரு பனிக் களமாக மறுவகைப்படுத்தப் பட்டு உள்ளது.
இந்த நாடு அதன் சியரா நெவாடா டி மெரிடா மலைத் தொடரில் 6 பனிப்பாறைகளைக் கொண்டுள்ளது.
2011 ஆம் ஆண்டில் ஹம்போல்ட் தவிர ஐந்து பனிப்பாறைகள் அழிந்து விட்டன.
அறிவியலாளர்களின் கூற்றுப்படி, இந்தோனேசியா, மெக்ஸிகோ மற்றும் ஸ்லோவேனியா ஆகியவை பனிப்பாறைகள் இல்லாத நாடுகளாக மாற உள்ள நாடுகளின் பட்டியலில் அடுத்த வரிசையில் உள்ளன.