சீனா தனது புதிய விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பினை நிறைவு செய்வதற்குத் தேவையான மூன்று பெட்டகங்களில் இரண்டாவதுப் பெட்டகமான வென்ஷியனை விண்ணில் ஏவியது.
இது சீனாவின் இலட்சிய நோக்கம் கொண்ட விண்வெளித் திட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட மிக சமீபத்திய முன்னேற்றமாகும்.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சீன மொழியில் "தேவலோக அரண்மனை" என்று பொருள்படும் தியாங்காங் விண்வெளி நிலையத்தின் முதன்மைப் பெட்டகத்தினைப் பெய்ஜிங் விண்ணில் ஏவியது.
தியாங்காங், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை செயல்படும்.