TNPSC Thervupettagam

வெப்ப அலை - 'அறிவிக்கப்பட்டப் பேரிடர்'

August 3 , 2024 115 days 174 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது, வெப்ப அலையினை ஒரு அறிவிக்கப்பட்டப் பேரிடராக வகைப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று அறிவித்துள்ளது.
  • அறிவிக்கப்பட்டப் பேரிடராக அது அறிவிக்கப்பட்டால், 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நிதி உதவி பெறத் தகுதியுடையதாக மாறும்.
  • தற்போது தேசியப் பேரிடர் நிவாரண நிதி/மாநிலப் பேரிடர் நிவாரண நிதி (SDRF) உதவிக்கு தகுதியான பேரிடர்களின் அறிவிக்கப்பட்ட பட்டியலில் 12 பேரிடர்கள் உள்ளன.
  • அவை புயல், வறட்சி, நிலநடுக்கம், தீ விபத்து, வெள்ளம், சுனாமி, ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பனிச்சரிவு, மேக வெடிப்பு, பூச்சிகளின் தாக்குதல் மற்றும் உறைபனி மற்றும் குளிர் அலை ஆகியவையாகும்.
  • இந்தியாவில் இந்த ஆண்டின் கோடை காலத்தில் 536 வெப்ப அலை நிகழ்வுகள் நிகழ்ந்த நிலையில் இது 14 ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்