TNPSC Thervupettagam

வெப்ப அலைகள் – குறிப்பிட்ட மாநிலம் சார்ந்தப் பேரழிவு

November 1 , 2024 28 days 123 0
  • தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு பதிவான நிலையில், மாநில அரசு வெப்ப அலையை ஒரு பேரிடராக அறிவித்துள்ளது.
  • ஏற்கனவே சில மாநிலங்களான சத்தீஸ்கர், ஓடிஸா, கேரளா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் கர்நாடகா ஆகியன வெப்ப அலையினை மாநிலம் குறிப்பட்டப் பேரிடர்களாக அறிவித்துள்ளன.
  • இந்தியாவில் வெப்ப அலைகள் தற்போது தேசியப் பேரிடராக அறிவிக்கப் படாததால், 2005 ஆம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஒன்றிய அரசிடம் இருந்து இதற்காக நிதி உதவியினை மாநிலங்கள் பெற இயலாது.
  • இந்த ஒரு அறிவிப்பின் மூலம், வெப்ப அலையால் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
  • இந்த முயற்சிகளுக்கு வேண்டி மாநில அரசாங்கம் மாநிலப் பேரிடர்ப் பதிலெதிர்ப்பு நிதியினைப் பயன் பயன்படுத்தும்
  • கோடைக் காலங்களில் ஈரப்பதம் அதிகரிக்கும் வகையிலான நீண்டக் கடற்கரையை தமிழ்நாடு கொண்டுள்ளது.
  • மதுரை, திருச்சி, வேலூர், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி போன்ற நகரங்களில் இரவு நேரங்களிலும் வெப்பத்தை உறிஞ்சி வெளியிடும் பாறை குன்றுகள் உள்ளன.
  • 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய சில மாவட்டங்களில் முறையே 31 மற்றும் 26 நாட்களுக்கு 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
  • வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகியவற்றில் தலா 23 மற்றும் 21 நாட்களுக்கு அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்