TNPSC Thervupettagam

வெப்ப அலைத் தாக்கத்தின் தணிப்பு நடவடிக்கைகளுக்கான செயல் திட்டம்

October 7 , 2024 11 hrs 0 min 20 0
  • வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை இழக்க நேரிடும் என்று உலகளாவிய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
  • மிகவும் வெப்பமான வெப்பமண்டல வானிலையுடன் கூடிய தமிழ்நாடு, வெப்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
  • மாநிலத் திட்ட ஆணையமானது, ‘வெப்பத்தின் தாக்கத்தினைத் தணித்தல் - தமிழ்நாடு வெப்பத் தணிப்பு உத்தி’ என்ற அறிக்கையை வெளியிட்டது.
  • மனிதர்கள் வாழக்கூடிய வெப்பநிலை வரம்பு ஆனது 60% ஈரப்பதத்துடன் கூடிய 25 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையாகும்.
  • இருப்பினும், தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த வரம்பு தொடர்ந்து விஞ்சப்படுகிறது.
  • தற்போது, ​​மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 74% பேர் 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை உள்ள காற்று சூழலில் உள்ளனர்.
  • தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது 2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் வெப்ப அலை தாக்கத் தணிப்பு செயல் திட்டத்தைத் தயார் செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்