TNPSC Thervupettagam

வெப்ப அலையால் ஏற்பட்ட துறை வாரியான பாதிப்பு

November 13 , 2024 15 days 77 0
  • மாநிலத் திட்ட ஆணையமானது (SPC), தொழில் முறை சார்ந்தப் பாதிப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணித்து அதற்கான முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
  • இந்த அறிக்கையானது ‘Beating The Heat-Tamil Nadu Heat Mitigation Strategy’ என்ற ஒரு தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
  • வெளிப்புறத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், முறைசாராத தொழிலாளர்கள், இயங் கலை வழி ரீதியில் திரட்டப்படும் தொழிலாளர்கள், இயந்திர/உட்புற வெப்பம் நிறைந்த சூழலில் பணியாற்றும் தொழிலாளர்கள் போன்ற பல பெரும் பாதகமான வேலைச் சூழ்நிலைகளில் உள்ள மக்களின் பிரச்சினையை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டி உள்ளது.
  • கால்நடை வளர்ப்பு, மீன்வளம், காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் ஆகியவற்றில் உள்ள சவால்களையும் இந்த அறிக்கை குறிப்பிட்டு, அதற்கான முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
  • சில பரிந்துரைகள்:
    • வெப்ப அழுத்தக் குறியீடுகள், அணியக் கூடிய வகையிலான வெப்ப உணர்விக் கருவிகள் அல்லது வானிலைக் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பணியிடத்தில் வெப்பத் தாக்க அளவைக் கண்காணிப்பதற்கான வழிமுறைகளை நிறுவுதல்
    • முதலுதவிக்கான பல்வேறு நெறிமுறைகள், மருத்துவச் சேவையை அணுகுதல் மற்றும் ஆபத்தின் போது தொழிலாளர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட வெப்பம் தொடர்பான சம்பவங்களுக்கான அவசரகால எதிர் நடவடிக்கைத் திட்டங்களை உருவாக்குதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்