மலேரியா மற்றும் கோவிட்-19 நோய்க்கான சிகிச்சையை மாற்றியமைக்கக் கூடிய புதியதொரு பெரும் கண்டுபிடிப்பினை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மலேரியா மற்றும் கோவிட்-19 போன்ற நோய்கள் பரவுவதில் Hsp70 என்ற மனித புரதம் ஒரு முக்கிய காரணியாக இருப்பதை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
Hsp70 (வெப்பத் தாக்குப் புரதம் 70) என்பது ஒரு வகை மூலக்கூறு சாப்பரோன் ஆகும்.
இது மற்ற புரதங்களை அவற்றின் மிகச் சரியான வடிவங்களில் மடிக்க உதவுவதிலும் தவறாக மடிவதைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்ற ஒரு புரதமாகும்.
Hsp70 புரதத்தினை ஒரு இலக்காகக் குறிவைப்பதன் மூலம், நோய்க்கிருமிகளின் நகல் எடுக்கும் திறனை மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வைரசின் திறனைச் சீர்குலைக்கலாம்.