பெருநகர சென்னை மாநகராட்சியானது (GCC - Greater Chennai Corporation) நெகிழிக் கழிவுப் பொருட்களைக் கையாள்வதற்காகவும் அவற்றிலிருந்து எரிபொருளை உற்பத்தி செய்வதற்காகவும் ஒரு வெப்பத்தாற் பகுப்பு (Pyrolysis Plant) ஆலையை நிறுவ முடிவு செய்து கொண்டிருக்கின்றது.
GCC ஆனது ஒவ்வொரு நாளும் 500 டன்கள் எடையுள்ள நெகிழிக் கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றது.
வெப்பத்தாற் பகுப்பு செயல்முறையானது ஆக்ஸிஜன் வாயு இல்லாத நிலையில் மிகவும் அதிக வெப்ப நிலையின் கீழ் நெகிழிப் பொருட்களில் உள்ள கரிமச் சேர்மங்களை சிதைத்து அவற்றை எரிபொருளாக மாற்றுகின்றது.
இந்த எரிபொருளானது ஒரு லிட்டர் ரூ.25 முதல் ரூ.35 வரை விற்கப்படுகின்றது. ஒரு லிட்டர் எரிபொருளைத் தயாரிப்பதற்கு 2 கிலோ கிராம் நெகிழிக் கழிவுப் பொருள் தேவைப்படுகின்றது.
இந்த எரிபொருளானது சிமெண்ட், எஃகு, செங்கல் தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன்களில் பயன்படுத்தப் படுகின்றது.
மேலும் இந்த எரிபொருளானது சரக்கு வண்டிகள், மின்னாக்கி அமைப்புகள், நீராவிக் கப்பல்கள் மற்றும் இதர வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றது.