மும்பை விமான நிலையமானது சமீபத்தில் வேளாண் மற்றும் மருந்து தயாரிப்புகளை சேமித்து வைக்கும் உலகின் மிகப்பெரிய வெப்பநிலைக் கட்டுப்பாட்டு வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள “ஏற்றுமதி குளிர்ச்சி மண்டலமானது” 700 டன்களுக்கும் அதிகமான சரக்குகளை வைத்திருக்கும் திறன் கொண்டது.
மும்பை விமான நிலையமானது IATA CEIV PARMA அங்கீகாரத்தைப் பெற்ற உலகின் சில விமான நிலையங்களில் ஒன்றாகவும் நாட்டின் முதலாவது விமான நிலையமாகவும் ஆசியாவில் மூன்றாவது விமான நிலையமாகவும் திகழ்கின்றது.
இது சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தினால் (IATA - International Air Transport Association) வழங்கப்படும் ஒரு அங்கீகாரமாகும்.
உலகெங்கிலும் உள்ள மருந்துத் தயாரிப்புகளின் விநியோகத் தொடரை மேம்படுத்தும் பொருட்டு, மருந்துத் தளவாடத்தில் சுயாதீன மதிப்பீட்டாளர்களுக்கான சிறப்புமிகு மையமானது (Centre of Excellence for Independent Validators in Pharmaceuticals Logistics - CEIV Pharma) IATAயினால் தொடங்கப்பட்டுள்ளது.