இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதில் சூபா புல் மரம் கொண்டுள்ள திறனை ஒரு புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது என்ற நிலையில் இது இரண்டாம் வகை நீரிழிவு நோயை கையாள்வதற்கான புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
சூபாபுல் அல்லது லுகேனா லியூகோசெபலா (லாம்.) டி விட் என்பது வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பொதுவாகக் காணப்படுகின்ற வேகமாக வளரும் முதிரைத் தாவர இனத்தினைச் சேர்ந்த மரமாகும்.
இது பெரும்பாலும் ஆந்திரப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
இரண்டாம் வகை நீரிழிவு நோயில், மனித உடலானது இன்சுலினை மிகவும் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை சாதாரண அளவில் இருக்காது.
GLUT2 என்பது குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸைச் செல் சவ்வுகளில் இடம் பெயரச் செய்ய உதவும் ஒரு புரதமாகும்.