மேற்கு கரீபியன் கடலில் உருவான சாரா என்ற ஒரு வெப்பமண்டலப் புயல் ஆனது, ஹோண்டுராஸின் வடக்குக் கடற்கரையில் கரையை கடந்தது.
அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியன் கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் புயல் உருவாகும் காலம் ஆனது பொதுவாக ஜூன் 01 முதல் நவம்பர் 30 வரை ஆகும்.
புயல் உருவாக்கத்தினைத் தூண்டுவதற்கு, கடல் வெப்பநிலை குறைந்தபட்சம் 79 டிகிரி பாரன்ஹீட் (26 செல்சியஸ்) ஆக இருக்க வேண்டும்.
1991 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டுகள் காலத்தின் அடிப்படையில், நவம்பர் மாதத்தில் பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு வெப்பமண்டலப் புயல் உருவாகும்.