TNPSC Thervupettagam

வெம்பக்கோட்டையில் சுடுமண் பொம்மை

July 17 , 2023 370 days 230 0
  • தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையானது (TNSDA) சமீபத்தில், விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அகழாய்வுத் தளத்தில் சுடுமண் பொம்மை ஒன்றினைக் கண்டெடுத்து உள்ளது.
  • இது கருப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட ஆண் உருவம் கொண்ட சுடுமண் பொம்மை ஆகும்.
  • இதில் தலையலங்காரமும் உதட்டுப் புன்னகையும் மெருகுற்று காணப்படுகின்றன.
  • அதன் கண்களும் அவற்றின் புருவங்களும் கயல் வடிவில் வரையப் பட்டிருக்கின்றன.
  • வெம்பக் கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழாய்வில் 800க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
  • இதில் டெரகோட்டா (கடுமட்பாண்டங்கள்) காலத்து மடல்கள், புகைபிடிக் குழாய், சுழல் பாரம், செப்பு நாணயம் மற்றும் கண்ணாடி மணிகள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்