TNPSC Thervupettagam

வெர்டிபிளேன் X3 ஆளில்லா விமானம்

February 26 , 2023 640 days 289 0
  • இதற்கான சோதனையின் போது, டெஹ்ரி கர்வாலில் உள்ள மாவட்ட மருத்துவ மனைக்கு 2 கிலோ என்ற அளவிற்கு எடையுள்ள காசநோய் எதிர்ப்பு மருந்துகளை கொண்டு செல்வதற்கு வெர்டிபிளேன் எக்ஸ்3 ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப் பட்டது.
  • AIIMS மருத்துவமனையில் உள்ள ஹெலிகாப்டர் ஏறுதளத்திற்கும் மருத்துவமனைக்கும் இடையேயான 40 கிலோமீட்டர் தொலைவினை இதன் மூலம் 30 நிமிடங்களில் கடக்க முடிந்தது.
  • 2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழிப்பது என நிர்ணயிக்கப்பட்ட இந்தியாவின் இலக்கிற்கு உதவிடும் வகையில் மருந்துகளை மட்டுமின்றி, சளி மாதிரிகளையும் ஆய்வகங்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஒரு பணியினையும் இந்தத் திட்டம் எளிதாக்கும்.
  • மருத்துவப் பொருட்களை எடுத்துச் செல்ல ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப் படுவது இது முதல் முறை அல்ல.
  • பெங்களூரைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனம் ஒன்று அருணாச்சலப் பிரதேசத்தில் மருந்துகளை கொண்டு செல்வதற்காக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியது.
  • இது தவிர, ஆளில்லா விமானங்கள் மூலமான மருந்து வழங்கீட்டுச் சேவையினை பல்வேறு இணைய மருந்தக நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்