ஆந்திரப் பிரதேச அரசு கூகுள் நிறுவனத்தின் ஆல்பாபெட் குழுமத்துடன் இணைந்து வெற்றிட ஒளியிழை தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை செயல்படுத்தவுள்ளது.
இந்த தொழில்நுட்பம் மூலம் கம்பிகள் இல்லாது, உயர்வேக இணையதள இணைப்புகளை விநாடிக்கு 20 கிகாபிட்ஸ் வேகத்தில் 20 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வழங்க முடியும். உலகில் இத்தகைய தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
FSOC (Free Space Optical Communication) திட்டத்தின் நோக்கம் ஆந்திர மாநில அரசின் ஒளியிழை இணையதள கட்டமைப்பின் கீழ் மக்களுக்கு உயர்தரமான சேவைகளை மலிவான விலையில் வழங்குவதாகும்.
FOSC தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆந்திரப் பிரதேச அரசால் பழங்குடி மக்கள் வசிக்கும் தொலைதூரப் பகுதிகள் உட்பட அனைத்து குடியிருப்புகளுக்கும் உயர் அலைவரிசை இணையதள சேவைகளை வழங்க முடியும்.