உலகளாவிய முக்கிய கப்பல் பாதை உள்பட பாரசீக வளைகுடாவிலும் இந்தியப் பெருங்கடலிலும் மூன்று நாட்கள் நடத்தப்படும் வெலாயத் 97 எனும் கடல்படைப் பயிற்சியை ஈரான் நிறைவு செய்திருக்கின்றது.
இந்த பயிற்சி ஏறக்குறைய 2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹார்மஸ் ஜலசந்தி, மக்ரான் கடற்கரை, ஓமன் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதி ஆகிய இடங்களில் நடந்தது.
இப்பயிற்சி ஈரானின் நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள், வானூர்திகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் திறனை பறைசாற்றியது.
ஹார்மஸ் ஜலசந்தியில் நடைபெற்ற பயிற்சியின் போது முதல்முறையாக ஈரான் காதிர் வகை நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஒரு கடல் ஏவுகணையை ஏவியது.