வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் – 2020, ஜனவரி 9
January 11 , 2020
1783 days
1250
- பிரவசி பாரதிய திவாஸ் ஆனது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் என்று அழைக்கப் படுகின்றது.
- 1915 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியதன் நினைவாக இத்தினமானது கொண்டாடப்படுகின்றது.
- 2019 ஆம் ஆண்டில், இந்த நிகழ்வானது வாரணாசியில் கொண்டாடப் பட்டது.
- வெளிநாடு வாழ் இந்தியர்களை அங்கீகரிப்பதற்காக 2003 ஆம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப் படுகின்றது.
- இந்நிகழ்ச்சியானது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப் படுகின்றது.
- இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பினால் நிதியுதவி அளிக்கப் படுகின்றது.
- மிகச் சிறந்து விளங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களை கௌரவிப்பதற்காக பிரவசி பாரதிய சம்மன் விருதானது இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப் படுகின்றது.
Post Views:
1250