வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட பட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கல்
April 20 , 2025 2 days 38 0
பல்கலைக்கழக மானியக் குழுவானது, 2025 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு (வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களிலிருந்து பெறப் பட்ட பட்டங்களுக்கு என்று சமமான அங்கீகாரம் மற்றும் மானியம்) விதிமுறைகளை அறிவித்துள்ளது.
சர்வதேசச் சான்றிதழ்களுடன் வெளிநாட்டிலிருந்துத் திரும்பும் இந்திய மாணவர்கள், இந்திய நிறுவனங்களில் சேருவதற்கோ அல்லது வேலைவாய்ப்புக்காகவோ தங்கள் பட்டங்களுக்கு அங்கீகாரம் பெறுவதில் பெரும்பாலும் தாமதங்கள் மற்றும் நிச்சயம் அற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர்.
மருத்துவம், மருந்தாக்கவியல், செவிலியம், சட்டம் மற்றும் கட்டிடக்கலை போன்ற துறைகள் மற்றும் பிற படிப்புகள் "இந்தியாவில் உள்ள அந்தந்தச் சட்டப்பூர்வ சபைகளின் விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்படும்.
இனிமேல் அத்தகையப் படிப்புகள் அந்தந்த ஒழுங்குமுறை அமைப்புகளால் வகுக்கப் பட்ட குறிப்பிட்ட சில விதிமுறைகள் மற்றும் அங்கீகார நடைமுறைகளால் தொடர்ந்து நிர்வகிக்கப் படும்.
வெளிநாட்டுப் பட்டங்களை அங்கீகரிப்பதற்கான நிபந்தனைகளையும் UGC பட்டியல் இட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள், அங்கீகாரம் பெறாத கல்வித் திட்டங்கள் அல்லது இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறுவதன் மூலம் பெறப்பட்ட பட்டங்கள் அதற்குச் சமமான ஒரு பட்டத்திற்குத் தகுதியற்றவை என்றும் UGC தெளிவு படுத்தியுள்ளது.