வெளிநாட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினம் - ஜூன் 16
June 19 , 2024 158 days 109 0
2008 ஆம் ஆண்டு சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் (IFAD) மற்றும் உலக வங்கி இணைந்து இந்தத் தினத்தினை அனுசரித்தன.
2015 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இந்த நாளை அதிகாரப் பூர்வமாக நிறுவியது.
800 மில்லியனுக்கும் அதிகமான குடும்ப உறுப்பினர்களுக்கான ஆதரவினை வழங்கும் 200 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரைக் கௌரவிக்கும் வகையில் இந்த சிறப்பு நாள் கொண்டாடப்படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Digital remittances towards financial inclusion and cost reduction” என்பதாகும்.