ஒன்றிய வர்த்தக அமைச்சகம் ஆனது, 2023 ஆம் ஆண்டு புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையினை அறிவித்துள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதி மற்றும் 1 டிரில்லியன் டாலர் சேவைகள் ஏற்றுமதி என்ற ஒரு இலக்கை அடைவதற்கான துறை சார்ந்த சில இலக்குகளை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தப் புதியக் கொள்கையின்படி, ஃபரிதாபாத், மொராதாபாத், மிர்சாபூர் மற்றும் வாரணாசி ஆகியவை முறையே ஆடைகள், கைவினைப்பொருட்கள், கைவினைக் கம்பளம் மற்றும் தரைவிரிப்புகள் மற்றும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்களுக்கான சிறந்த ஏற்றுமதி நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வகையின் கீழ் தற்போதுள்ள 39 நகரங்களுடன் கூடுதலாக இவை அறிவிக்கப் பட்டுள்ளன.
இந்தப் புதியக் கொள்கையின் கீழ், பால் சார்ந்தத் தொழில்துறைக்கு, சராசரி ஏற்றுமதி விதிமுறையினைப் பின்பற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டளவில் 200-300 பில்லியன் டாலர்களாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிற நிலையில் இது இணைய வர்த்தக ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்றும் நம்பப் படுகிறது.
இதன்படி கிடங்கு வசதியுடன் கூடிய ஒரு பிரத்தியேக மண்டலம் உருவாக்கப்படும்.
இது சிறப்பு இரசாயனங்கள், உயிரினங்கள், பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய SCOMET என்ற ஒரு கொள்கையை நெறிமுறைப் படுத்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.