மூலதனப் பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் வரியற்ற இறக்குமதி அனுமதி போன்ற ஏற்றுமதித் திட்டங்கள் அடுத்த ஓர் ஆண்டுக் காலத்திற்கு நீட்டிக்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், இந்திய அரசானது வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2015 – 20 என்ற கொள்கையை அடுத்த ஒரு ஆண்டுக் காலத்திற்கு, அதாவது 2021 வரை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளது.
இது 2020 ஆண்டு வெளிநாட்டு விற்பனையை 900 பில்லியன் டாலராக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தக் கொள்கையானது 5 வெவ்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
பொருட்கள் குறித்த திட்டம், சந்தை குறித்த திட்டம், சந்தையுடன் இணைக்கப்பட்ட பொருட்கள் குறித்த திட்டம் மற்றும் வேளாண் கட்டமைப்புச் சலுகைத் திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.
கிராம உத்யோக் யோஜனா மற்றும் விசேஷ் கிரிஷ் ஆகியவை ஒற்றை வழி வணிகச் சரக்கு ஏற்றுமதித் திட்டமான இந்திய வணிகச் சரக்கு ஏற்றுமதித் திட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.
மேலும் இந்தக் கொள்கையானது நாட்டின் ஏற்றுமதித் தொகுப்பைப் பன்முகப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இது வர்த்தகச் சமநிலையின்மையைக் குறைப்பதற்காக தொடர் ஊக்குவிப்பு நடைமுறையை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.