கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் விளைவாக கடுமையாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது 44.5% குறைந்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் 2.74 மில்லியன் ஆக இருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையானது, 2021 ஆம் ஆண்டில் 1.52 மில்லியனாக குறைந்தது.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் வருகையானது 2020 ஆம் ஆண்டினை விட 2021 ஆம் ஆண்டில் 52.6% அதிகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 10.93 மில்லியன் ஆக இருந்தது.
2021 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் முதல் 15 இடங்களில் இடம் பெற்ற நாடுகளுள் அமெரிக்கா, இங்கிலாந்து, வங்காளதேசம், கனடா, நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கும்.
கடந்த ஆண்டில் இந்தியாவிற்கு வருகை வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 81% பேர் இந்த நாடுகளில் இருந்து வருகை தந்துள்ளனர்.
87.5% வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமானப் பயணம் ஆனது மிகவும் விருப்பமிக்க பயண வசதியாக இருந்தது.
இந்திய நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மக்களின் எண்ணிக்கை என்பது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் 7.29 மில்லியனாக இருந்த வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மக்களின் எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் 7.3% அதிகரித்து, 8.55 மில்லியன் ஆக இருந்தது.
2021 ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து அமெரிக்கா, கத்தார், ஓமன் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் உள்நாட்டுச் சுற்றுலா 11.05% என்ற நிலையில் அதிகரித்ததுடன் சிறிய முன்னேற்றத்தினையும் இத்துறை கண்டது.
2020 ஆம் ஆண்டில் 610.22 மில்லியனாக இருந்த உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் 677.33 மில்லியனாக இருந்தது.
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் 2018-2019 ஆம் ஆண்டிற்கான தேசியச் சுற்றுலா விருதுகளில் முதலிடம் பிடித்தமைக்காக உத்தரகாண்ட், மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு அந்த விருதுகளை வழங்கினார்.