TNPSC Thervupettagam

வெளியுறவுத் துறை அமைச்சரின் அஸர்பேஜான் பயணம்

April 12 , 2018 2418 days 751 0
  • அணி சேரா இயக்கத்தின் (Non-Aligned Movement) அமைச்சரவை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அஸர்பேஜானின் தலைநகரமான பாகு நகரத்திற்கு 3 நாட்கள் அலுவல்பூர்வ சந்திப்பை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தொடங்கியுள்ளார்.
  • அணி சேரா இயக்கத்தின் இடைக்கால அமைச்சரவை மாநாடு ஏப்ரல் 5-6 தேதிகளில் பாகு நகரத்தில் “நீடித்த வளர்ச்சிக்கான பாதுகாப்பு மற்றும் சர்வதேச அமைதியை ஊக்குவித்தல்” என்ற கருத்துருவின் அடிப்படையில் நடைபெற்றது.
  • அணி சேரா இயக்கம் என்பது எந்த ஒரு சக்தி வாய்ந்த பெரிய குழுவிலும் முறையாக சேராமல் உள்ள நாடுகளின் குழு ஆகும். 2012ம் ஆண்டு வரை இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
  • 17 நாடுகள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகள் இதில் பார்வையாளர்களாக உள்ளன. இந்த அமைப்பு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றி வருகிறது.
  • 2011ம் ஆண்டு பாலியில் (இந்தோனேசியா) 16வது அமைச்சரவை மாநாட்டில் அஸர்பேஜான் குடியரசு இந்த அமைப்பில் சேர்ந்து கொண்டது.
  • 2019ம் ஆண்டு அஸர்பேஜான் குடியரசு அணி சேரா இயக்கத்தின் 18வது மாநாட்டை நடத்துவதோடு 2019 முதல் 2022 வரையிலான கால கட்டத்திற்கு இந்த அமைப்பின் தலைவராகவும் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்