அரிய வெளிர் தாடை ஈப்பிடிப்பான் (சையோர்னிஸ் போலியோஜெனிஸ்) என்பது அருணாச்சலப் பிரதேசத்தின் நம்சாய் மாவட்டத்தின் நோங் லவுங் (போர் பீல்) வனப் பகுதியில் காணப்பட்டது.
இது இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது.
அவை அடர்ந்த, ஈரப்பதம் நிறைந்த வன வாழ்விடங்களில், குறிப்பாக பசுமை மாறாக் காடுகள் மற்றும் வளமான அடி மரங்களுடன் கூடிய பகுதியளவு வகை பசுமை மாறாக் காடுகள் காணப்படுகின்றன.
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அதன் பாதுகாப்பு நிலை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் ஆகும்.