ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு மேம்பாட்டு வங்கியுடன் ஒரு ஒப்பந்தத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை இறுதி செய்துள்ளது.
நீர் சேமிப்புத் திறனை அதிகரிக்கவும், அழிந்து போன நீர்நிலைகளின் இணைப்புகளை மீட்டெடுக்கவும், மிகவும் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வெள்ளத்தைத் தடுக்கவும் வேண்டி ஒரு பயனுள்ள நீர் மேலாண்மை முறையை உருவாக்க இந்தத் திட்டமானது வடிவமைக்கப் பட்டுள்ளது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.