உலகளவில் சுமார் 23 மில்லியன் மக்கள் உலோகச் சுரங்க நடவடிக்கைகளின் நச்சுக் கழிவுகளால் வெகுவாக மாசுபடுத்தப்பட்ட வெள்ளப் பெருக்குச் சமவெளி நிலங்களில் வாழ்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.
எஞ்சியக் கழிவுகளின் சேமிப்பு வசதிகள் உட்பட, செயல்படும் மற்றும் செயலற்ற உலோகச் சுரங்கத் தளங்களால் ஏற்படும் மாசுபாடுகளை உள்ளடக்கியது.
இந்த மாசுபாடு சுமார் 479,200 கிலோமீட்டர் நதி வழித்தடங்களைப் பாதிக்கிறது.
மேலும் உலகளவில் 164,000 சதுர கிலோமீட்டர் வெள்ளச் சமவெளிகளைப் பாதிக்கிறது.
இந்தப் பகுதிகள் 5.72 மில்லியன் கால்நடைகளுக்கு உணவளிக்கின்றன.
மேலும், 65,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பாசன நிலத்தை உள்ளடக்கியவை ஆகும்.