வெள்ளிக் கிரகத்தில் பாஸ்பைன் வாயு
September 19 , 2020
1532 days
752
- சர்வதேச ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு குழுவானது வெள்ளிக் கிரகத்தின் வளிமண்டலத்தில் பாஸ்பைன் வாயு இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
- பூமியில், பாஸ்பைன் வாயுவானது ஆக்ஸிஜன் அற்ற சூழலில் வாழும் பாக்டீரியாவினால் உற்பத்தி செய்யப் படுகின்றது.
- எனவே, இந்தக் கண்டுபிடிப்பானது வெள்ளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூற்றைக் குறிக்கின்றது.
- பாஸ்பைன் வாயுவானது பல்வேறு தொழிற்துறை அமைப்புகளில் உயிரியல் தன்மையற்றதாகவும் உருவாகின்றது.
- இது முதல் உலகப் போரின் போது இரசாயன ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.
- இது தற்போது வரை வேளாண் உமிழ்ப் பொருளாகத் தயாரிக்கப் படுகின்றது.
- இது குறைகடத்தித் தொழிற்துறையில் (semiconductor industry) பயன்படுத்தப் படுகின்றது. இது மெத் ஆய்வகங்களின் துணைப் பொருளாகவும் விளங்குகின்றது.
வெள்ளி
- வெள்ளி ஆனது பூமியின் மிக நெருங்கிய அண்டைக் கோளாகும்.
- இது பூமியின் இரட்டைக் கோள் என்றும் அழைக்கப்படுகின்றது.
- இது அமைப்பில் ஒரே மாதிரியாக இருந்தாலும் பூமியை விடச் சிறியதாக உள்ளது.
- இது சூரியனிலிருந்து இரண்டாவது கோளாக உள்ளது.
- இது சூரியக் குடும்பத்தில் வெப்பமான கோளாக விளங்குகின்றது.
- பூமியின் மேற்பரப்பில் விழும் வளிமண்டல அழுத்தத்தை விட 90 மடங்கு அதிக வளிமண்டல அழுத்தத்தை இது கொண்டுள்ளது.
Post Views:
752