பூமியின் அண்டை கோளான வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தில் அணு நிலை ஆக்ஸிஜன் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
SOFIA வான்வழி கண்காணிப்புக் கருவியைப் பயன்படுத்தி இந்தக் கண்டறிதல் மேற் கொள்ளப் பட்டது.
வெள்ளிக் கோள் ஆனது பூமியைப் போலன்றி, கார்பன் டை ஆக்சைடு (96.5%) அதிகம் காணப்படுகின்ற தடிமனான மற்றும் அழிவுகரமான வளிமண்டல அமைப்பினைக் கொண்டுள்ளது.
இங்குக் கண்டறியப்பட்ட இந்த அணு நிலை ஆக்ஸிஜன், ஒற்றை ஆக்ஸிஜன் அணுவைக் கொண்டுள்ளது. இது இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களைக் கொண்டுள்ள மற்றும் சுவாசிக்கக் கூடிய மூலக்கூறு ஆக்ஸிஜனில் இருந்து வேறுபட்டுள்ளது.
மேற்பரப்பில் இருந்து சுமார் 60 மைல் (100 கிமீ) உயரத்தில், வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தின் இரண்டு அடுக்குகளுக்கு இடையே ஆக்ஸிஜன் செறிவு மிகுந்து காணப்படுகிறது.
ஆக்சிஜனின் வெப்பநிலையானது அந்தக் கோளின் ஒளி பெறும் (பகல்) பக்கத்தில் -184 டிகிரி பாரன்ஹீட் (- 120 டிகிரி செல்சியஸ்) ஆகவும், அதன் ஒளி பெறா (இரவு) பக்கத்தில் -256 டிகிரி பாரன்ஹீட் (- 160 டிகிரி செல்சியஸ்) ஆகவும் உள்ளது.