TNPSC Thervupettagam

வெள்ளிக் கோளிலிருந்து வெளிப்படும் ரேடியோ சமிக்ஞைகள்

May 7 , 2021 1208 days 508 0
  • நாசாவின் விண்கலமான பார்க்கர் சூரிய ஆய்வுக் கலமானது வெள்ளிக் கோளிலிருந்து இயற்கையாகவே ரேடியோ சமிக்ஞைகள் வெளிப்படுவதை கண்டறிந்துள்ளது.
  • இந்த ஆய்வுக்கலமானது வெள்ளிக் கோளினுடைய வளிமண்டலத்தின் மேல்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது இந்த சமிக்ஞைகளைக் கண்டறிந்தது.
  • பார்க்கர் சூரிய ஆய்வுக் கலமானது வெள்ளிக் கோளினுடைய வளிமண்டலத்தை அளவிட்டுள்ளது.
  • பார்க்கர் சூரிய ஆய்வுக் கலத்தின் கண்டுபிடிப்புகளின்படி, புவியைப் போலவே வெள்ளிக் கோளும் அயனி மண்டலம் எனப்படும் தனது வளிமண்டலத்தின் மேற்பகுதியில் மின்னூட்டப்பட்ட வாயுக்களைக் கொண்டுள்ளது.
  • இந்த அடுக்கிலுள்ள மின்னூட்டப்பட்ட துகள்களின் திரள்களிலிருந்து ரேடியோ சமிக்ஞைகள் ஆய்வுக் கலத்தினால் பெறப்பட்டன.
  • மேலும், வெள்ளியினுடைய வளிமண்டலத்தின் மேல்பகுதியானது, ஒரு சூரிய சுழற்சிக் காலத்தில் மாற்றங்களுக்கு உள்ளாகிறது எனவும் இந்த விண்வெளி ஆய்வுக்கலம் உறுதி செய்துள்ளது.

சூரிய சூழற்சி

  • சூரியன் என்பது ஒரு பெரிய மின்னூட்டப்பட்ட சூடான வாயுப் பந்தாகும்.
  • இந்த வாயுக்கள் நகர்வதால் ஒரு சக்தி வாய்ந்த காந்தப்புலமானது உருவாகிறது.
  • சூரியனின் இந்த காந்தப்புலமானது ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மாற்றத்திற்கு உள்ளாகிறது.
  • இதுவே சூரியச் சுழற்சி எனப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்