விலங்குகளை வேட்டையாடுபவர்கள் வடகிழக்கு கென்யாவில் மிகவும் அரிதான இரண்டு வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகளைக் கொன்றுள்ளனர். உலகில் தற்பொழுது ஒரு வெள்ளை ஒட்டகச் சிவிங்கி மட்டுமே உயிரோடு உள்ளது.
தோல் செல்கள் நிறமி இல்லாமல் இருப்பதற்குக் காரணமான ஒரு மரபணு நிலையானஇலூசிய மாற்றமானது ஒட்டகச் சிவிங்கியின் வெள்ளைத் நிறத் தோற்றத்திற்கு காரணமாக விளங்குகின்றது.
இலூசிய மாற்றமானது அல்பினிசத்திலிருந்து வேறுபட்டதாக உள்ளது. இங்கு மெலனின் உற்பத்தி செய்யப் படுவதில்லை.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியமானது (International Union for Conservation of Nature - IUCN) ஒட்டகச் சிவிங்கிகளை தனது சிவப்புப் பட்டியலில் “பாதிக்கப்படக்கூடிய” இனங்களாக வகைப்படுத்தி உள்ளது.
IUCNன் கூற்றுப்படி, வாழ்விட இழப்பு, உள்நாட்டு அமைதியின்மை, வேட்டையாடுதல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவை ஒட்டகச் சிவிங்கிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்ததற்கு வழிவகுத்த நான்கு முக்கிய காரணிகளாகும்.