வெள்ளை காண்டாமிருகம் ஆனது அதன் ஆப்பிரிக்க சார்பு இனமான கருப்பு காண்டா மிருகத்துடன் ஒப்பிடும்போது அதன் வாயின் வடிவத்தின் காரணமாக சதுர உதடு காண்டாமிருகம் என்றும் அழைக்கப்படுகிறது.
வெள்ளை காண்டாமிருகத்தில் இரண்டு கிளையினங்கள் உள்ளன. அவை
தெற்கு வெள்ளை காண்டாமிருகங்கள்: செரடோதெரியம் சிமம் சிமம்
வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள்: செரடோதெரியம் சிமம் காட்டனி
தெற்கு வெள்ளை காண்டாமிருகம் என்பது மிகவும் பரவலாக காணப் படுகின்ற இனங்களில் ஒன்றாகும். இதில் சுமார் 17,000 உள்ளன.
கென்யாவில் உள்ள பெஜெட்டா வளங்காப்பகத்தில் வசிக்கும் கடைசி இரண்டு வடக்கு வெள்ளை காண்டாமிருகம் மிக அருகி வரும் இனம் என்ற நிலையில் உள்ளது.