“இயற்கை”, “தங்கம்” அல்லது “புவியியல்” ஹைட்ரஜன் என்றும் அறியப்படுகின்ற வெள்ளை ஹைட்ரஜன் ஆனது, பூமியின் கண்ட மேலடுக்கில் காணப்படும் இயற்கையான ஹைட்ரஜனின் ஒரு வடிவமாகும்.
சமீப காலம் வரை, குறிப்பிட்ட அளவிலான தூய ஹைட்ரஜன் வாயுவானது புவியில் இருப்பதாகக் கருதப்படவில்லை.
ஆனால் சமீபத்தியக் கண்டுபிடிப்புகள் ஆனது, மாபெரும் ஹைட்ரஜன் இருப்பு இருப்பதைக் காட்டுகின்ற நிலையில் இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை ஹைட்ரஜனின் மிகப்பெரிய இருப்புகளில் ஒன்றாகும்.
இந்த இருப்புகளில் 6 மில்லியன் முதல் 250 மில்லியன் மெட்ரிக் டன் ஹைட்ரஜன் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
வெள்ளை ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் போது CO2 உமிழ்வை அது ஏற்படுத்தாது.