TNPSC Thervupettagam

வெள்ளைப் பூஞ்சை நோய்

May 24 , 2021 1153 days 640 0
  • வெள்ளைப் பூஞ்சை எனும் தொற்றுநோய் மக்களை தாக்குவதாகக் கண்டறியப் பட்டு உள்ளது.
  • இது கருப்புப் பூஞ்சை நோயை விட மிகவும் ஆபத்தானதாகும்.
  • குறைவான நோய் எதிர்ப்பு சக்தியினாலோ அல்லது இந்த மாதிரியான பூஞ்சைகள் காணப்படும் பகுதிகளைத் தொடுவதினாலோ இந்த வெள்ளைப் பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறது.
  • சர்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள் மற்றும் நீண்ட காலமாக மருந்து உட்கொள்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
  • ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் கொரோனா வைரஸ் நோயாளிகளை இந்த வெள்ளைப் பூஞ்சை நோய்த் தொற்று தாக்குகிறது.
  • இந்த நோயாளிகளின் நுரையீரலை இந்த நோயானது நேரடியாகத் தாக்குகிறது.
  • வெள்ளைப் பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் கொரோனாத் தொற்றின் அறிகுறிகளையே கொண்டிருப்பர், ஆனால் கொரோனா சோதனையில் எதிர்மறை முடிவையே அவர்கள் கொண்டிருப்பர்.
  • இந்தத் தொற்றினை சிடி ஸ்கேன் () X-கதிர் ஆய்வு மூலம் கண்டறிய இயலும்.
  • வெள்ளைப் பூஞ்சை நோயானது பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரல், நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, உடலின் அந்தரங்க பாகங்கள் மற்றும் வாய் போன்ற பகுதிகளைப் பாதிக்கும்.
  • சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் இந்த வெள்ளைப் பூஞ்சை நோய்த் தொற்றினைத் தடுக்க இயலும்.
  • மேலும் ஆக்சிஜன் () செயற்கை சுவாசக் கருவிகளை முறையாக சுத்தப்படுத்தச் செய்யவும் வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்