தென் கொரிய ஆராய்ச்சியாளர்கள், சில வினாடிகளில் மின்னேற்றம் செய்யக்கூடிய உயர் ஆற்றல் கொண்ட கலப்பு வகை சோடியம்-அயனி மின்கலத்தினை உருவாக்கி உள்ளனர்.
சோடியம் ஆனது லித்தியத்தை விட சுமார் 1000 மடங்கு அதிகமாக காணப்படுகிறது மற்றும் குறைவான விகிதத்திலான அரிய கனிமமாக உள்ளது.
எனவே, சோடியம்-அயனி மின்வேதியியல் ஆற்றல் சேமிப்பு ஆனது மலிவான மற்றும் சாத்தியமான ஆற்றல் ஆதாரமாக விளங்கும்.
தற்போது, கிடைக்கப் பெறக் கூடிய சோடியம்-அயனி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் குறைந்த ஆற்றல் அடர்வினைக் கொண்டிருந்தாலும், ஒப்பீட்டளவில் அதிக ஆற்றல் அடர்வினை வழங்குகின்றன என்பதால் அது மோசமான மின்னேற்ற செயல்திறனைக் கொண்டுள்ளது.