2018 ஆம் ஆண்டிற்கான பிராண்ட் பைனான்ஸ் IT – சர்வீஸ் 15 வருடாந்திர அறிக்கைப்படி (Brand Finance IT Services 15 annual report for 2018) உலகின் வேகமாக வளரும் IT சேவை நிறுவனமாக டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் (Tata Consultancy Services - TCS) அறிவிக்கப்பட்டுள்ளது.
டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தற்போது மொத்தம்391 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு நிறுவன மதிப்பைக் (Brand Value) கொண்டுள்ளது. கடந்த ஆண்டின் நிறுவன மதிப்பான 9.081 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 14.4 சதவீதம் அதிகரிப்பினைக் கொண்டு தற்போது இந்நிறுவனத்தின் நிறுவன மதிப்பு 1.309 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளது.
உலகின் முன்னணி நிறுவன மதிப்பீட்டு (Brand Valuation) அமைப்பான பிராண்ட் பினான்ஸ் நிறுவனம் 1996 ஆம் ஆண்டு டேவிட் ஹைக் (David Haigh) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.