வேகமான ரேடியோ அலை வெடிப்புகள்
November 9 , 2020
1482 days
874
- சமீபத்திய ஆய்வுகளின் படி, செறிந்த ரேடியோ அலைகள் தற்போது பால்வீதியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
- இவை வேகமான ரேடியோ அலை வெடிப்புகள் (FRB - fast radio bursts) என்று அழைக்கப் படுகின்றன.
- மற்ற அண்டங்களில் இவை அடிக்கடி கண்டறியப்பட்டுள்ளன.
- சமீபத்திய ஆய்வுகளின் படி அமெரிக்கா மற்றும் கனடா உள்ள இரண்டு ரேடியோ அலை தொலைநோக்கிகள் இதைக் கண்டறிந்துள்ளன.
- இதற்கு FRB200428 என்று பெயரிடப் பட்டுள்ளது.
- பல்வேறு கோட்பாடுகள் நியூட்ரான் நட்சத்திரங்களால் இவை ஏற்படுகின்றன என்றும் கூறுகின்றன.
- நியூட்ரான் நட்சத்திரங்கள் என்பது சூப்பர்நோவாக்கள் எனப்படும் வெடிப்பில் அழிந்த நட்சத்திரங்களின் எச்சங்களாகும்.
- சமீபத்திய ஆய்வானது FRBகள் உண்மையில் ‘மேக்னட்டார்’ எனப்படும் ஒரு அரிய வகை நியூட்ரான் நட்சத்திரத்தால் உருவாக்கப் படுன்றன என்பதை அடையாளம் காட்டுகிறது.
- இவை பூமியிலிருந்து சுமார் 30,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள எஸ்.ஜி.ஆர் 1935 + 2154 எனப்படும் மேக்னட்டாரில் இருந்து வந்தவையாகும்.
- இது பால்வீதியின் மையத்தில், வுல்பெகுலா எனும் விண்மீன் கூட்டத்தில் அமைந்து உள்ளது.
- மேக்னட்டார்கள் பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த காந்தங்களாகும்.
Post Views:
874